செய்திகள்தமிழகம்

என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
Nlc Fire Accident News 01.07.2020
Nlc Fire Accident News 01.07.2020

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles