அரசியல்செய்திகள்

ஊழலில் முதலிடம்அதிமுக தான் :நேரில் விவாதிக்க தயாரா? – எடப்பாடிக்கு தயாநிதி மாறன் சவால்!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக முதல்வர் தயாரா என சென்னை வில்லிவாக்கம் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.கழக எம்.பி.,தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் செய்வதில் அதிமுக அரசுதான் முதலிடம்.. நேரில் விவாதித்த தயாரா? - எடப்பாடிக்கு தயாநிதி மாறன் சவால்! 

                                                         தயாநிதி மாறன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் பெரியார் தெருவில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஜெயன், வட்ட செயலாளர் லோகுபாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர்.

கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் தயாநிதி மாறன், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் ஊழல் அரங்கேற்றத்தை குறித்து பேசினார். ஊழல் செய்வதில் எடப்பாடி அரசு முதலிடம் என்று கூறிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சாடினார். இன்னும் 4 மாதங்கள் தான். அதன் பின் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என கூறிய தயாநிதி மாறன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறினார்.

ஊழல் செய்வதில் அதிமுக அரசுதான் முதலிடம்.. நேரில் விவாதித்த தயாரா? - எடப்பாடிக்கு தயாநிதி மாறன் சவால்! 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், முதுகெலும்பில்லாத ஆட்சியாக எடப்பாடி அரசு இருந்து வருகிறது. முதல்வர் வேட்பாளர் குழப்பம் அவர்களுக்குள் இருந்து வருகிறது. பல தொழிற்சாலைகளையும் பல லட்சம் தொழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறும் தமிழக முதல்வர் அது குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் இவ்வாறு அதிமுகவினரும் முதல்வரும் நிறைவேற்றாத திட்டங்களை நிறைவேற்றியதாக தந்திரங்களை செய்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் செய்த அனைத்து ஊழல்களுக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. இது குறித்து மறுப்பு பேசி பதிலளிக்காமல் நேரடியாக விவாதம் செய்ய முதல்வர் தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகளை காட்டிலும் திமுக பிரதிநிதிகளும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான் அதிக அளவில் மக்களை சந்தித்து மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தோம் எனக் கூறிய அவர், திமுகவினரிடம் சொன்னால் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என மக்கள் நினைப்பதால் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் இந்த மக்கள் கிராம சபை கூட்டம் மூலம் பெற்று அதனை பூர்த்தி செய்வதற்கு வழி வகை செய்கிறோம் என தெரிவித்தார்.

Show More

Leave a Reply

Related Articles