நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கினை கடை பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.இதையொட்டி கள்ளக்குறிச்சியில் பெட்ரோல் பங்க் உட்பட அனைத்து கடைகளும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்படும். ஆரம்பகட்டத்தில் ஊரடங்கினை பின்பற்றிய மக்கள், தற்போது அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில், 7 வது வார ஞாயிற்று கிழமையான நேற்று கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

ஊரடங்கினை பின்பற்றாமல் வெளியே சுற்றி திரிபவர்களை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மணிகண்டன் ஆகியோர் எச்சரிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles