நமது ஆட்சியர்

ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆடு வளர்க்க நிதியுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வாங்க நபர் ஒருவருக்கு 66 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கான ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 10 பெண் ஆடுகள், ஒரு ஆண் ஆடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம் ஒன்றிய பகுதிகளில் 135 பயனாளிகளுக்கு தலா 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண் ஆட்டிற்கு 6,000 ரூபாயும், 10 பெண் ஆடுகள் வாங்கிட 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

மேலும், காப்பீட்டு நிறுவனங்களில் ஆடுகளை மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய 4,200 ரூபாய்க்கான பாத்திரங்கள், மருந்து, ஊட்டச்சத்து கலவை, குடற்புழு நீக்கம், போக்குவரத்து கட்டணம், சில்லரை செலவினங்கள் ஆகியவற்றை ஈடுகட்ட 5,800 ரூபாயை மூன்று தவணைகளில் வழங்கப்படும்.இத்திட்டத்தில் ஆடு வளர்ப்பில் விருப்பம் உள்ள நிலமற்ற சிறு, குறு விவசாயிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அங்கத்தினர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெண் விவசாயிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு இத்திட்டத்தில்முன்னுரிமை அளிக்கப் படும்.

விருப்பமுள்ள பயனாளர்கள் கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வரும் 7ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும். மண்டல இணை இயக்குனரின் இசைவுடன், கலெக்டரால் பயனாளிகள்தேர்வு செய்யப்படுவார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Kallakurichi Collector News 04.08.2020
Kallakurichi Collector News 04.08.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles