கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

உச்சம் தொட்ட கொரோனா ! 1017 பேர் பாதிப்பு !!

corona update
ஃஸ்கொரொன 03.07.2020

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் மட்டும் 244 பேரும் ,உள்ளாட்சி பகுதிகளில் 170 நபர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 878 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று 450-க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது.இதில் ஒரே நாளில் உச்சமாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் பாதிப்பு 1017 ஆக உயர்ந்துள்ளது . கள்ளக்குறிச்சி யில் உள்ள 21 வார்டுகளிலும் இக்கொரோனா தொற்று பரவி நகர பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்க்படு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள 10908 வீடுகளில் 41083 நபர்கள் கணக்கெடுக்கபட்டு ,தொற்று மற்றும் மருத்துவ பிரச்சனைகளை குறித்து கேட்டரிந்து வருகின்றனர் …வார்டு வாரியாக கள்ளக்குறிச்சி பகுதியில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை …

வார்டு எண் :01 .11 பேர் பாதிப்பு 

வார்டு எண் :02.15 பேர் பாதிப்பு

வார்டு எண் :03.00 பேர் பாதிப்பு

வார்டு எண் :04.02 பேர் பாதிப்பு

வார்டு எண் :05.12 பேர் பாதிப்பு

வார்டு எண் :06.08 பேர் பாதிப்பு

வார்டு எண் :07.03 பேர் பாதிப்பு

வார்டு எண் :08.25 பேர் பாதிப்பு

வார்டு எண் :09.03 பேர் பாதிப்பு

வார்டு எண் :10.26 பேர் பாதிப்பு

வார்டு எண் :11.14 பேர் பாதிப்பு

வார்டு எண் :12.08 பேர் பாதிப்பு

வார்டு எண் :13.03 பேர் பாதிப்பு

வார்டு எண் :14.01 பேர் பாதிப்பு

வார்டு எண் :15.10 பேர் பாதிப்பு

வார்டு எண் :16.23 பேர் பாதிப்பு

வார்டு எண் :17.19 பேர் பாதிப்பு

வார்டு எண் :18.18 பேர் பாதிப்பு

வார்டு எண் :19.25 பேர் பாதிப்பு

வார்டு எண் :20.03 பேர் பாதிப்பு

வார்டு எண் :21.15 பேர் பாதிப்பு

 

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles