கல்வராயன்மலைநமது மாவட்டம்

இரண்டு மணி நேர மழை நீர் கோமுகி அணைக்கு வந்து செர்ந்த்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி சங்கராபுரம் ,கச்சிராயபாளையம், வடக்கநந்தல், கல்வராயன் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் குறிப்பாக கல்வராயன்மலை, கச்சராபாளையம்,சங்கராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலையில் பெரிய நீர்வீழ்ச்சியில் கனமழையின் காரணமாக அருவியில் திடீரென நீர்வரத்து துவங்கியது மேலும் இந்த அருவியின் வழியாக கல்பனை,

Dam And Falls News 28.06.2020
Dam And Falls News 28.06.2020

போட்டியும் போன்ற நாடுகளில் இருந்து நீர்வரத்து பெற்று தற்போது கோமுகி அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது இதனால் அணையில் தற்போது நீர் தேக்கம் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக தற்போது கோமுகி அணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பஞ்சம் குறையும் எனவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles