சினிமா செய்திகள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நான் பணியாற்ற உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை : நடிகர் விஷால்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உண்மையா? - விஷால் விளக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ், விஷால்
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் அந்த படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென அப்படத்தில் இருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அப்படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்த கதையில் விஷால் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
விஷால்
இந்நிலையில், நடிகர் விஷால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நான் பணியாற்ற உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து து.ப. சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ள விஷால், துப்பறிவாளன் 2 படத்தையும் இயக்க உள்ளார். இதுதவிர இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கிலும் விஷால் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Show More

Leave a Reply

Related Articles