
சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் உதயசூரியா இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார் இந்நிலையில்தான் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் மகள் காயத்ரி என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர் இந்நிலையில்தான் இருவரும் வெவ்வேறு வேறு சமூகம் என்பதால் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, திருமணம் செய்து கொண்டு சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். எங்களுக்கு காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் இவர்கள் இருவரையும் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தார் பின்னர் காதல் ஜோடிகள் இருவரும் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.