செய்திகள்விளையாட்டு

இந்த வருஷம் ஐபிஎல்லில் விளையாட மாட்டேன்-டெல் ஸ்டெய்ன்

பிரபல தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டெல் ஸ்டெய்ன் இந்த ஆண்டு ஐபிஎல்லில் விளையாட போவதில்லை என அறிவித்துள்ளார்.

Dale Steyn

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளில் பல்வேறு அணி நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சார்பில் விளையாடி பெயர் பெற்ற தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் ஐபிஎல்லில் இந்த ஆண்டு விளையாட போவதில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விளையாடி வருவதால் ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Show More

Leave a Reply

Related Articles