அரசியல்செய்திகள்

அமைப்புச் செயலாளர் சு. திருமாறன் கட்சியில் இருந்து நீக்கம்- திருமாவளவன் நடவடிக்கை

விடுதலை சிறுத்தை நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்- திருமாவளவன் நடவடிக்கை

திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்படாத திட்டக்குடி (தனி) தொகுதியில் மண்டல அமைப்புச் செயலாளர் சு. திருமாறன் என்கிற அய்யா சாமி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அம்மனுவை திரும்பப்பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அவர் அவ்வாறு திரும்பப் பெறாமல், சுயேச்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராகப் போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். அத்துடன், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிக்கையாகும்.

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டல செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles