அரசியல்

அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் எம் எல் ஏ


ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஆதரவற்ற முதியவர்கள், வாழ்வாதாரம் இழந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஊரடங்கு காலம் முடியும் வரை தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்து அதற்கான தொடக்க நிகழ்வு இன்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதரவற்றோர், வாழ்வாதாரம் இழந்தவர்கள் சமூக இடைவெளியுடன் நின்றபடி உணவு பொட்டலங்களை வாங்கி சென்றனர்.இந்தத் திட்டம் ஊரடங்கு காலம் முடியும் வரை தொடர்ந்து தினமும் அனைவருக்கும் உணவு வழங்கப்படும் என்றும் மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டனர்

Show More

Leave a Reply

Related Articles