செய்திகள்தமிழகம்

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் -எல்.முருகன்..

வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற தேர்தல் நிர்வாகி குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மூன்றாவது அணியால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என கூறினார்.

தொகுதி பங்கீடு இறுதி செய்தபின் முறையாக அறிவிக்கப்படும் என கூறிய அவர், தமிழக சட்ட பேரவையில் பாஜக சார்பில் இரட்டை இலக்கில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என தெரிவித்தார். பாஜக தேசிய தலைவர்கள் பலரும் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வருகை தர உள்ளதாக எல்.முருகன் கூறினார்.

Show More

Leave a Reply

Related Articles