அரசியல்செய்திகள்தமிழகம்

அதிமுக- பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது!!

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை, பாஜக பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், மனுத்தாக்கலுக்கு குறைந்த நாட்களே உள்ளன. எனவே, கூட்டணியை விரைவில் இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக, திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. பாஜக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட குழுவினர், முதலமைச்சர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருகட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதிமுக கூட்டணியில் 25 இடங்களை பாஜக கேட்டிருப்பதாகவும், அதில் கணிசமான தொகுதிகள் கிடைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Show More

Leave a Reply

Related Articles