மருத்துவம்பொது மருத்துவம்

அதிகம் “ஆவி பிடிச்சா” கருப்பு பூஞ்சை நோய் வரும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்

அதிகப்படியாக நீராவி சிகிச்சை எடுத்துக் கொள்வது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பெங்களூரை சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை தீபக் ஹல்திப்பூர்.

அதிலும் கருப்பு பூஞ்சை நோய் நாடு முழுக்க ஆயிரக்கணக்கான மக்களிடம் பரவியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

அறிகுறிகள்

முகத்தில் வீக்கம், கண் பகுதியில் வீக்கம் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். கண்கள் சிவப்பாக மாறுவது போன்றவை தீவிர அறிகுறிகள். இப்படி ஏதாவது தென்பட்டால், உடனடியாக, காது மூக்கு தொண்டை நிபுணரை பார்த்து இந்த நோயை சரி செய்யாவிட்டால் கிருமி மூளைக்கு சென்று சேர்ந்து நோயாளி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு இருக்கிறது.

ஸ்டீராய்டு ஊசிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாலும், ஸ்டீராய்டு ஊசிகள் போடப்படுவதாலும்தான் இதுபோல பாதிப்பு ஏற்படுவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் இதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தீபக்.

போன வருடம் பரவவில்லையே இதுபற்றி அவர் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கூறுகையில், கடந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக காணப்படவில்லை. ஆனால், அதை ஒப்பிடும்போது இப்போது இந்த நோய் பரவல் ஏற்பட்டு இருக்கும் விகிதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவு. இரண்டாவது விஷயம், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது. பெரும்பாலும் கருப்பு பூஞ்சை நோய், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நோயாளியிடம்தான் அதிகமாக பரவியதை பார்க்க முடிகிறது.

Show More

Leave a Reply

Related Articles