செய்திகள்இந்தியா

அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி!!

கொரோனாவுக்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் வரும் 13ம் தேதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 37 இடங்களில் தடுப்பூசி சேமிப்பு வசதி: அடுத்த வாரம் முதல் தடுப்பூசி செலுத்தத் திட்டம்
கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றின் அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், தடுப்பூசி விநியோகிக்கும் பணி 13ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

சென்னை, மும்பை, ஹரியானாவின் கர்னல், கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் உள்ளதாகவும், மேலும் 37 இடங்களில் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த சேமிப்பு மையங்களில் மொத்தமாக மருந்துகள் சேமித்து, பின்னர் படிப்படியாக பிரித்து அனுப்பப்படும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவின் என்ற செயலியின் அடிப்படையில் ஆன்லைன் பதிவின் மூலம் யாருக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற தரவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஊசிகள் செலுத்தப்பட உள்ளன.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles